வரலாறு
அருள்மிகு தரவைச் சித்தி விநாயகர் ஆலயம்
தரவை சித்தி விநாயகர் ஆலயத்தின் மறைந்து போன வரலாற்று உண்மைகள்
அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை மாநகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ தரவைப் பிள்ளையார் ஆலயம் என்பது கலாசார சமூக விழுமியங்களை பேணுவதிலும் சைவநெறி சார்ந்த பாரம்பரிய கலாச்சார சமூக வாழ்விலும் சமய அனுஸ்டானங்களில் காலம் காலமாக ஈடுபட்டு வருகின்றது.
மட்டக்களப்பு – பொத்துவில் பிரதான வீதியில் மட்டக்களப்பு மாநகரத்துக்கு தெற்கே 41 கிலோ மீற்றர் தூரத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
கல்முனை மாநகரில் தமிழர் செறிந்து வாழும் பிரதேசத்தின் தென்பகுதியில் தரவைச் சித்தி விநாயகர் ஆலயம் எழுச்சியோடு காட்சியளிக்கிறது. ஆலயத்தின் கிழக்கே ஒரு கிலோ மீ
தரவை சித்தி விநாயகர் ஆலயத்தின் மறைந்து போன வரலாற்று உண்மைகள்
அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை மாநகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ தரவைப் பிள்ளையார் ஆலயம் என்பது கலாசார சமூக விழுமியங்களை பேணுவதிலும் சைவநெறி சார்ந்த பாரம்பரிய கலாச்சார சமூக வாழ்விலும் சமயனுஸ்டானங்களில் காலம் காலமாக ஈடுபட்டு வருகின்றது.
வரலாறு
அருள்மிகு கடற்கரை கண்ணகி அம்மன் ஆலயம்
இந்து சமயம் பல வழிபாட்டு முறைகளைக் தன்னகத்தே கொண்டது.இவ் வழிபாட்டு முறைகள் எல்லாம் மனிதனின் படிமுறை வளர்ச்சியால் காலத்திற்கு காலம் தோற்றம் பெற்றவை.இவற்றில் ஒரு பகுதி வழிபாட்டு முறைதான் பெண் தெய்வ வழிபாடாகும்.குறிப்பாக கிழக்கிலங்கை மக்களிடையே வழக்கில் உள்ள சைவம் பழைய மரபைச் சார்ந்தது.இவர்கள் கடைப்பிடிக்கும் சடங்கு முறையான வணக்கம் மிகப் பழமையானது.ஆலயங்கள் தோன்றும் முன்னரே சடங்கு முறையான வழிபாடு தமிழர்களிடையே தோன்றிவிட்டது.
காலப்போக்கில் ஆலயங்கள் ஆகம முறைப்படி நிரந்தரமாக அமையப் பெற்றாலும் கூட தற்போதும் சடங்கு முறைகளே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு காலம் காலமாக வணங்கப்பட்டு வரும் காளி, துர்க்கை,மாரி,பேச்சி முதலிய பெண் தெய்வ வரிசையில் இறுதியாக வந்து சேர்ந்த தெய்வம் கண்ணகியாகும்.கண்ணகி தமிழர்களிடையே ஒரு புதுத் தெய்வமாக உருப்பெற்ற கதையை ‘சிலப்பதிகாரம்’ நயம்படக் கூறுகின்றது.
எங்கள் சேவைகள்
பாலுக்குள் இருக்கும் நெய் நம் கண்ணுக்கு தெரிவதில்லை. தயிராக்கி கடைந்தால் தான் புலப்படுகிறது. அதுபோல, பக்தி செய்தால் தான் இறைவனைக் காண முடியும்
தரவைச் சித்தி விநாயகர் ஆலய பூசை விபரங்கள்
விசேட பூசைகள்
திதி மற்றும் ஏனைய சடங்குகள்
பொது நிகழ்வுகள்
ஆலய நிர்வாக உப அமைப்புகளும், பணிகளும்
ஆலய நிருவாக அறிவித்தல்கள்
நேரலை மற்றும் காணொளி
ஒரு விளக்கு இன்னொரு விளக்கை ஏற்றுவதன் மூலம் எதையும் இழந்து விடாது. அந்த இடத்தில் ஒளி இரண்டு மடங்காகும். அது போல நாம் பிறருக்கு உதவுவதால் நாம் இழக்க போவது எதுவுமில்லை. அதனால் நாம் பெறும் இன்பம் இரண்டு மடங்காகும்.
எங்கள் சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை ஆராயுங்கள்
தீப்பந்தத்தைக் கீழ்நோக்கிப் பிடித்தாலும் அதன் ஜுவாலை மேல்நோக்கி எழுவதுபோல், உயர்ந்த குணத்தை கீழ்ப்படுத்த சொப்பனத்திலும் முடியாது.
வருடாந்த வைகாசி திருகுளிர்த்தி 2025
- நேரம் :
- இடம் : கல்முனை கடற்கரை கண்ணகி அம்மன் கோவில்
கல்முனை மாநகர் ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் வருடாந்த மகோத்சவத் திருவிழா
- நேரம் :
- இடம் :
அருள்மிகு ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவ திருமுகம் – 2025
- நேரம் :
- இடம் : அருள்மிகு தரவைச் சித்தி விநாயகர் ஆலயம்
நிர்வாக உறுப்பினர்கள்
நம்முடைய தலைவன், மனம் வாக்கு காயம் ஆகியவற்றால் நாம் செய்யும் குற்றங்கள் அனைத்தையும் அறிகிறான். ஆகவே, கடவுளிடத்தில் ஒவ்வொருவருக்கும் அச்சம் இருக்க வேண்டும்.
க. காராளசிங்கம்
உறுப்பினர்
சிவஸ்ரீ க. வி.பிரமீன் சர்மா
உறுப்பினர்
கி. தேவகிருஷ்ணா
உறுப்பினர்
தி. திலீபன்
உறுப்பினர்
க. பிரசாந்தன்
உறுப்பினர்
யோகச்சந்திரன்
உறுப்பினர்
இது எங்கள் தரவைநாயகன் பிள்ளைகளின் தித்திப்பு பொங்கல் விழா-2026 🤍 ... See MoreSee Less
0 CommentsComment on Facebook
... See MoreSee Less
0 CommentsComment on Facebook
சிறப்புடன் நடைபெற்ற நவராத்திரி பூஜைகள்🙏🙏🙏
நவராத்திரி விரதத்தின் முதல் நாள் பூஜை வழிபாடுகள் கல்முனை தரவைச் சித்தி விநாயகர் ஆலயத்தில் நேற்று
( 22 / 09 2025 ) மிகவும் சிறப்புடன் நடைபெற்றது.
முதலாம் நாள் பூஜை வழிபாடுகளில் பெருமளவில் பக்தர்கள் கலந்து கலந்து கொண்டனர்.
கூட்டுப் பிரார்த்தனை, அறநெறி சிறார்களின் சொற்பொழிவுகள்- ஆகியவற்றை தொடர்ந்து நவராத்திரி விழா பூஜைகள் நடைபெற்றன.
நவராத்திரி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு இன்று ( 23 / 09 / 2025 ) மிகவும் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ... See MoreSee Less
0 CommentsComment on Facebook
தரவை சித்தி விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி
பூஜை
முப்பெரும் தேவிகளை அனுஷ்டிக்கும் நவராத்திரி விரதம் இன்று முதல் ( 22/09/2025) ஆரம்பமாகிறது.
இந்துக்களின் சக்தியை நோக்கிய முக்கியமான விரதம் இதுவாகும்.
இன்று ஆரம்பமாகும் இந்த புனித விரதத்தையிட்டு கல்முனை ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகும்.
மாலை 6.30 க்கு ஆரம்பமாகும் பூஜை வழிபாடுகளை இரவு 8:30 அளவில் நிறைவு செய்வதற்கு ஆலய நிர்வாகம் தீர்மானித்திருக்கிறது.
அன்பார்ந்த அடியார்களே....!
விசேட பூஜை வழிபாடுகளில் பங்குபற்றி துர்க்கை- லட்சுமி- சரஸ்வதி : முப்பெரும் தேவியரின் அருளாசியை பெற்றேகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நவராத்திரி விரதம் என்பது சக்தியை நோக்கி அனுட்டிக்கும் இந்து சமய விரதங்களில் ஒன்று. மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகிறது. நவராத்திரி காலத்தில் முதல் மூன்று நாட்கள், வீரத்தை வேண்டி துர்க்கையை வழிபடுகின்றனர். அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தை வேண்டி இலட்சுமியை வழிபடுகின்றனர். இறுதி மூன்று நாட்கள் கல்வி, கலைகளை வேண்டி கலைமகளை வழிபடுகின்றனர்.
நவராத்திரி விரதம் புரட்டாதி (புரட்டாசி) மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியைக்) குறித்து நோற்கப்படும் நோன்பாகும். இது தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாதி மாதத்தில் நோற்கப்படும் சாரதா நவராத்திரியே நவராத்திரி விரதமாக அனுசரிக்கப்படுகிறது.
நவராத்திரி பூசை புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்யப்பட வேண்டும். ஆகவே புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் அனுட்டிக்கப்படும் நோன்பு (விரதம்) சாரதா நவராத்திரி நோன்பாகும். ... See MoreSee Less
1 CommentComment on Facebook
அரோகரா...🙏 அரோகரா...🙏
கண்ணகித் தாயின் ஊர்க் காவல் ... See MoreSee Less
3 CommentsComment on Facebook
Thivyan Jeyanthan , Guru Vicknesh தங்கள் இருவரின் கைவண்ணத்தால் அழகு பெற்றது காணொலி ❤️
🙏🙏🙏
❤️❤️
... See MoreSee Less
2 CommentsComment on Facebook
🙏🫀🙏
🙏🙏
காவிய நாயகி, கடற்கரை கண்ணபுரத்தாளின் பெட்டக வருகையும், வைகாசித் திருத் தாழ் திறத்தலும் - 2025 ... See MoreSee Less
11 CommentsComment on Facebook
தாயே சரணம்
🙏
❤️🙏
View more comments
இன்று திருக்கதவு திறத்தலுடன்* உற்சவம் ஆரம்பம்
கல்முனை கடற்கரை கண்ணகியம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவம் இன்று ( 02 / 06 / 2025 ) திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகிறது.
இன்று மாலை ஆறு முப்பது அளவில் அம்மனின் திருக்கதவு திறக்கப்பட்டு பூஜை வழிபாடுகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பமாகும்.
இதற்கு முன்னதாக, கல்முனை ஸ்ரீ தரவைச் சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து அம்மனின் பூஜை பொருட்கள் அடங்கிய பேளை - கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லும் சம்பிரதாய நிகழ்வும் உணர்வுபூர்வமாக நடைபெறும்.
தொடர்ந்து எட்டு நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தின் பிரதம பூசகர் கிருபைராஜா ஐயா தலைமையில் பூஜை வழிபாடுகள் இடம் பெறும்.
தினமும் கூட்டுப் பிரார்த்தனைகள், ஆன்மீக சிறப்பு சொற்பொழிவுகள், கல்முனை- 3, அறநெறி மாணவர்களின் சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளன. ... See MoreSee Less
0 CommentsComment on Facebook
www.kalmunainet.com/archives/106783
கல்முனை கடற்கரை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி 2025 ... See MoreSee Less
0 CommentsComment on Facebook